பாஜக ஆட்சிக்கு வந்தால் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ, தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஒரு வழியாக பாஜக கூட்டணி உறுதியாவிட்ட நிலையில், மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று மதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தூக்குத் தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களின் விளை நிலங்களில் மீத்தேன் எடுப்பது தடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அவரது தேர்தல் அறிக்கையில் மேலும் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. அதாவது, மீனவர்களின் உரிமைக்காக மதிமுக போராடும் என்பது, வெளிநாடு வாழ் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும் என்பது, விளையாட்டு வீரர்களுக்கு இலவசப் பயிற்சி, ஒப்பந்த தொழிலாளர் ஒழிப்பு முறை போன்றவை வலியுறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் யுனைட்டெட் ஸ்டேட் ஆப் இந்தியா என்று இந்தியா அழைக்கப்படும் என்றும், இந்திய அரசியல் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். மொத்தம் 46 தேர்தல் அறிக்கைகளில் இலங்கையில் பொது வாக்கெடுப்பு நிகழ்த்தப்படும் என்கிற அறிக்கையும் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

0 Responses to பாஜக ஆட்சிக்கு வந்தால் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படும்! : வைகோ