Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவில் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் வரை ஈர்த்துள்ளது போலும்.

காரணம் பாகிஸ்தானிலும் ஆம் ஆத்மி எனும் அதே பெயரில் புதிதாக ஒரு அரசியல் கட்சியைத் தொடக்கியுள்ளனர் ஆர்ஸ்லான் உல் முல்க் எனும் உரிமைப் போராட்டக் குழுவினர்.

பாகிஸ்தான் தேர்தல் கமிஷினிடம் உத்தியோகபூர்வமாக பதியப்பட்டுள்ள இக்கட்சியின் நோக்கம், பாகிஸ்தானின் தேசத் தந்தையாக போற்றப்படும் மொஹ்மட் அலி ஜின்னாவின் கனவைப் பூர்த்தி செய்வது தான் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் காவல்துறை மீள் கட்டமைப்பு மற்றும் சித்திரவதைக்கு எதிரான மசோதாக்களை உடனடியாக தாக்கல் செய்யக் கோரி  பஞ்சாப் சட்டசபை கட்டிடத்திற்கு முன்னாள் அடுத்த வாரம் முதல் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப் போவதாகவும் இக்கட்சி அறிவித்துள்ளது.

0 Responses to 'ஆம் ஆத்மி' எனும் அதே பெயரில் பாகிஸ்தானில் புதிய அரசியல் கட்சி உருவாக்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com