Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இடதுசாரிக் கட்சிகள் திமுகவுடன் இணையாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

நாகை மாவட்டம் கீழ்வெண்மணியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசியுள்ள பிரகாஷ் காரத், தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அதிமுக தன்னிச்சையாக முடிவெடுத்து உள்ளது என்று கூறி உள்ளார். என்னதான் தனித்துப் போட்டியிட்டாலும் மத்தியில் ஆட்சி அமைய இடதுசாரிக் கட்சிகளின் பங்களிப்பு என்பது முக்கியத் தேவையாக இருக்கும் என்றும் மேலும் அவர் கூறியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று முடிவான நிலையில் இடதுசாரிக் கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்து இருந்தது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள பிரகாஷ் காரத், இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடும் என்று கூறியுள்ளதோடு  திமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் டெல்லியில் இன்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் கூட்டணி குறித்து  பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to இடதுசாரிக் கட்சிகள் திமுகவுடன் இணையாது:பிரகாஷ் காரத்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com