தமது பிரச்சினைகளுக்கு உள்நாட்டுக்குள் தீர்வுகாணவே தமிழ் மக்கள் விரும்பினார்கள். ஆனால், அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளே சர்வதேசத்தின் பக்கம் தமிழ் மக்களை நியாயம் கேட்டு செல்ல வைத்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது. ஆனால், அரசாங்கமோ பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அக்கறையற்று இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 7வது அமர்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை கைதடியில் நடைபெற்றது. அதன்போது, இடம்பெற்ற விவாதமொன்றில் கருத்து வெளியிடும் போதே முதலமைச்சர். சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, முன் நிபந்தனைகளற்ற பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து பேச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கிறது. ஆனால் அரசாங்கம் இதற்கு ஒத்துவரும் நிலையில் இல்லை என்று வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அங்கு தெரிவித்துள்ளார்.

0 Responses to அரசின் முறையற்ற நடவடிக்கைகளே தமிழ் மக்களை சர்வதேசத்திடம் செல்ல வைத்தது: சி.வி.விக்னேஸ்வரன்