Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது தப்பிச் சென்ற நபரொருவர் பெண் வேடம் அணிந்து தலைமறைவாக இருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதம் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயபாலன் ஸ்ரான்லி ரமேஸ் (வயது 28), அர்சஸ் நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிறை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த மாதம் 20ஆம் திகதி தப்பிச் சென்றிருந்தார்.

இந்த நிலையில், ஜெயபாலன் ஸ்ரான்லி ரமேஸை தேடி வந்த பொலிஸார் வவுனியாவில் இன்று அதிகாலை 12.15 மணியளவில் சிவப்பு நிற சுடிதார் அணிந்து பெண் வேடத்தில் இருந்த போது கைது செய்துள்ளனர்.

0 Responses to வவுனியாவில் சிறை அதிகாரிகளிடமிருந்து தப்பித்து பெண் வேடத்தில் மறைந்திருந்தவர் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com