Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கைது செய்யப்படுவாரா பாபா ராம்தேவ்?

பதிந்தவர்: தம்பியன் 29 April 2014

யோகா குரு பாபா ராம்தேவ், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குறித்து விமர்சனம் செய்த புகாரில் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல்காந்தி குறித்து விமர்சனம் செய்த பாபா ராம்தேவ், ராகுல் காந்தி தேனிலவு சுற்றுலாவுக்கு செல்வது போல தலித் வீடுகளுக்கு சென்று உணவருந்தி வருகிறார் என்று விமர்சனம் செய்திருந்தார். இதை அடுத்து பாபா ராம்தேவ், உத்திரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேஷில் நிகழ்ச்சிகள் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் வன்முறைத் தடுப்பு சட்டத்தின் கீழ், பாபா ராம்தேவ் மீது காங்கிரஸ் தொண்டர்கள் புகார் அளித்ததனர். எனவே மகாராஷ்டிர, ராஜஸ்தான், ஆந்திரா, பாட்னா உள்ளிட்ட காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாபா ராம்தேவ் விரைவில் கைதாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Responses to கைது செய்யப்படுவாரா பாபா ராம்தேவ்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com