ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மீதான தீர்மானம் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூற பணிக்கும் அதேவேளை, அதற்கான தீர்வுகளையும் நிறைவேற்றும். அத்தோடு நம்பகத்தன்மை, நிரந்த சமாதானம் மற்றும் ஒற்றுமையை ஊக்குவிப்பதாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இலங்கையின் இறுதி மோதல்களின் பின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் தொடர்பிலும் பான் கீ மூன் இலங்கை அரசாங்கத்திடம் ஞாபகப்படுத்தியுள்ளதாக பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளரான பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.




0 Responses to இலங்கை மீது நிறைவேற்றப்பட்டுள்ள ஐ.நா. தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு வழங்க பான் கீ மூன் வலியுறுத்தல்!