கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய விமானம் குறித்த மர்மம் கண்டுபிடிக்கப்படாமலே போகலாம் என மலேசியா தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஆஸ்திரேலியாவுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டிருப்பதுடன், விரைவில் ஆஸ்திரேலிய பிரதமர் டானி அபோட் மற்றும் முன்னாள் ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரி ஆங்குஸ் ஹாஸ்டன் ஆகியோரை சந்தித்து காணாமல் போன விமானம் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
கடந்த மார்ச் 8ம் திகதி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பீஜிங் நோக்கி சென்று கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 239 பயணிகளுடன் திடீரென வழி நடுவே காணாமல் போனது. இன்றுவரை பத்து விமானங்கள் 9 கப்பல்கள், இங்கிலாந்தின் ஒரு நீர் மூழ்கி கப்பல் என்பன தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகின்றன.
தென் இந்து சமுத்திரத்தில் காணாமல் போன விமான உதிர்ப் பாகங்களை ஒத்த பல பொருட்கள் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்த போதும் அவை எதுவும் விமானப் பாகங்களா என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் நேற்று மலேசிய அரசு ஒரு ஆச்சரியமான தகவலை வெளியிட்டிருந்தது. குறித்த விமானம் காணாமல் போயிருப்பதாக தீர்மானிப்பதற்கு முன்பதாக இறுதியாக விமானத்திலிருந்து கிடைத்த ஒலிப்பதிவில் ''Good Night Malaysian Three Seven Zero" என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இதனை விமானிகள் சொல்லவில்லை எனவும் யார் இதனைச் சொன்னது மர்மமாகௌள்ளது என்பதுமே அத்தகவல்.




0 Responses to காணாமல் போன விமானம் குறித்த மர்மம் கண்டுபிடிக்கப்படாமலே போகலாம்: மலேசியா புதிய எச்சரிக்கை