இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடந்தே தீரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பிக்க வேண்டுமாயின் அரசாங்கம், சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் சர்வதேச விசாரணையை இலங்கை அரசாங்கத்தினால் தவிர்க்க முடியாது. ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு அதிகாரிகள் இலங்கையில் விசாரணைகளை முன்னெடுப்பார்கள். அப்படியில்லை என்றால், வெளியிலிருந்தாவது விசாரணைகளை முன்னெடுப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்ற ஆதாரங்கள் மற்றும் நாற்பதிற்கும் அதிகமாக பெண்கள் இலங்கை இராணுவத்தினரால் பாலியற்பலாத்காரம் செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிடம் இருக்கின்றது. அந்த ஆதாரங்களே சர்வதேச விசாரணைக்கு முக்கியமானதாக அமைந்துள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.




0 Responses to இலங்கை மீது சர்வதேச விசாரணை நடந்தே தீரும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்