மக்களவைத் தேர்தலின் போது வாக்களிக்க யாரும் வாக்குச் சாவடிகளுக்கு வரக்கூடாது என்று, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எச்சரிக்கை
விடுத்து எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளனர்.
பீகார் மாநிலத்துக்கு வருகிற 10ம் திகதி மக்களவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அங்கு கயா உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மக்கள் தேர்தலில் வாக்களிக்க வாக்குச் சாவடிகளுக்கு வரக்கூடாது என்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை, மக்களில் சிலருக்கு என்று குறுஞ்செய்தி அனுப்பி எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்தலின் போது கொரில்லாத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளனர்.
இந்த குறுஞ்செய்தியை மாவோயிஸ்ட் செய்தித் தொடர்பாளர் செல்போனில் இருந்து அனுபப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




0 Responses to மக்களவைத் தேர்தலில் யாரும் வாக்களிக்க வரக்கூடாது!: மாவோயிஸ்ட் எச்சரிக்கை!