Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 08-05-2014 | Raasi Palan 08-05-2014

பதிந்தவர்: தம்பியன் 08 May 2014

மேஷம்
காசு, பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரும்.

ரிஷபம்
பெற்றோர்களின் அன்பிற்கு பாத்திரமாகும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்கலாமா என்ற எண்ணம் மேலோங்கும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும்.

மிதுனம்
புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு புகழ்குவிக்கும் நாள். உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். நீண்ட நாளைய பிரச்சினையன்று பஞ்சாயத்துக்கள் மூலம் வெற்றி பெறும்.

கடகம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். உள்ளம் மகிழும் விதம் உதிரி வருமானங்கள் பெருகும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். வியாபாரம், தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.

சிம்மம்
திடீர் பயணங்கள் ஏற்படும் நாள். பொதுக்காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள்.

கன்னி
எண்ணங்கள் நிறைவேறும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் கிளைத் தொழில்கள் தொடங்கலமா என்று சிந்திப்பீர்கள்.

துலாம்
பணம் பல வழிகளிலும் வந்து சேரும் நாள். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலம் தரும். தொழிலில் சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும். தொல்லை தந்தவர்கள் தாமகவே விலகுவர். வங்கிச் சேமிப்பு உயரும்.

விருச்சகம்
இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொகை எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும். வீடு வாங்கும் வாய்ப்பை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

தனுசு
கனவுகள் நனவாகும் நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் மீதியும் தொடரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகலும்.

மகரம்
காரியங்களில் வெற்றி காண கடவுள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். உதவும் குணம் கொண்ட உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட்டு அகலும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

கும்பம்
நன்மைகள் நடைபெறும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உற்றார், உறவினர்களுக்கு கொடுத்து உதவும் எண்ணம் மேலோங்கும். புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கைக்கு அஸ்திவார மிடுவீர்கள்.

மீனம்
மக்கள் செல்வாக்கு மேலோங்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். கடன்சுமை குறையும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

0 Responses to இன்றைய ராசி பலன் 08-05-2014 | Raasi Palan 08-05-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com