Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் யாழ் பல்கலைக் கழகத்திற்குள் இராணுவமோ, பொலிஸாரோ உள்நுழைவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தார், பீடாதிபதிகள் மற்றும் மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளை நேற்று புதன்கிழமை காங்கேசன்துறையில் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டால் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பலத்த விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அண்மையில் யாழ் பல்கலைக் கழக சூழலில் ஒட்டப்பட்டிருந்த துண்டுப்பிரசுரங்கள் தொடர்பிலும் குறித்த சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது, யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் பலரும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்துள்ளதால், அவர்களை நினைவுகூர்ந்து பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஷ்டிக்க அனுமதிக்கும்படி மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பதிலளித்துள்ள யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதய பெரேரா, ‘கூட்டமாகச் சேர்ந்து நினைவு தினம் அனுஷ்டிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனித்தனியாக நீங்கள் உங்கள் வீடுகளில் அனுஷ்டிக்கலாம். மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்தவேண்டுமே தவிர, அரசியல் விடயங்களில் உள்நுழைய வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, யாழ் பல்கலைக் கழகம் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னி இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் எதிர்வரும் 17, 18, 19ஆம் திகதிகளில் யாழ் பல்கலைக் கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்படும் என்கிற அச்சத்தினாலேயே யாழ் பல்கலைக் கழகத்தினை தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

0 Responses to யாழ் பல்கலைக் கழகத்திற்குள் இராணுவம் நுழையாது: உதய பெரேரா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com