Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 09-05-2014 | Raasi Palan 09-05-2014

பதிந்தவர்: தம்பியன் 09 May 2014

மேஷம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும். இடம், பூமி வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக சிலர் உங்களைத் தேடி வருவர்.

ரிஷபம்
தேசப்பற்றும், தெய்வப் பற்றும் மேலோங்கும் நாள். நீண்ட நாளைய நண்பர் ஒருவரின் நெருங்கிய நட்பு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் சுமுகமான நிலை உருவாகும். வாகனப்பழுதுச் செலவுகள் குறையும்.

மிதுனம்
சமுதாயப் பணிகளில் ஆர்வம் கூடும் நாள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாற்றினத்தவர்கள் மனதிற்கினிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர். நிலையான வருமானத்திற்கு வழி அமைத்துக் கொள்வீர்கள்.

கடகம்
பொதுநல ஈடுபாட்டால் புகழ் குவிக்கும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும். வருமானம் இருமடங்காகும். பயணத்தால் பலன் கிட்டும்.

சிம்மம்
ஊர்மாற்றம், இடமாற்றச் சிந்தனைகள் மேலோங்கும் நாள். பிரியமான நண்பர் ஒருவரின் சந்திப்பு கிடைக்கும். தூரத்து உறவினர்களால் சிறுவிரயம் ஏற்படலாம். தெய்வப்பற்று மேலோங்கும்.

கன்னி
விழாக்களில் கலந்து கொண்டு மகிழும் நாள். கொடுக்கல் & வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்ளும் எண்ணம் உருவாகும். மனமாற்றத்தால் மகிழ்ச்சி ஏற்படும். நீண்டதூரப் பயணமொன்றால் கையிருப்புக் கரையலாம்.

துலாம்
கற்றவர்களின் பாராட்டுக்களால் கனிவு கூடும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொலை தூரப் பயணத்திற்கு உறுதுணை புரியும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சகம்
வருமானம் உயரும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். விருந்தினர் வருகை உண்டு. பூர்வீகச் சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வியக்கும் செய்திகள் வந்து சேரும்.

தனுசு
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். தொழில் முன்னேற்றத்திற்கு பெண்வழி ஒத்துழைப்பு கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.

மகரம்
அமைதி கூட அம்பிகையை வழிபட வேண்டிய நாள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் விமர்சனங்களால் மனக்குழப்பம் ஏற்படலாம். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

கும்பம்
பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழும் நாள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களின் சேர்க்கை உண்டு. இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் நல்ல தகவல் வந்து சேரும்.

மீனம்
சாமர்த்தியமாகச் செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். வசதி, வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றிதரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும்.

0 Responses to இன்றைய ராசி பலன் 09-05-2014 | Raasi Palan 09-05-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com