Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நைஜீரியாவின் சிபோக் மற்றும் வேறு சில இடங்களில் இருந்து போக்கோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப் பட்ட 13 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட குறைந்தது 300 மாணவிகளை விடுவிக்க அமெரிக்கா, சீனா மற்றும் பிரிட்டன் உட்பட சர்வதேசம் களத்தில் இறங்கியுள்ளது.

இவர்களுடன் ஐ.நா சபையும் பாகிஸ்தானில் பெண்கள் கல்விக்குக் குரல் கொடுத்து தலிபான்களால் சுடப்பட்டு குணமடைந்த சிறுமிப் போராளியான மலாலாவும் இணைந்து குரல் கொடுத்துள்ளனர்.

மேலும் இக்கடத்தலில் ஈடுபட்ட போக்கோ ஹராம் தீவிரவாதக் குழுவின் தலைவன் அபூபக்கர் ஷெக்காவு மீது சர்வதேசத்தின் கவனம் அதிகரித்துள்ளது. மேலும் தனது செயற்கைக் கோள்களால் கடத்தப் பட்ட மாணவிகளின் பகுதிகளைக் கண்காணித்து நைஜீரியப் பாதுகாப்பு ஏஜன்ஸிகளுக்குத் தகவல் அளிக்கத் தாம் உதவுவதாக அதிபர் லீ கெகியாங் நைஜீரிய அதிபர் ஜோனத்தானிடம் கூறியுள்ளார். இந்நிலையில் ஐ.நா சபை வெளியிட்ட செய்தியில் மாணவிகளை அடிமைகளாக அல்லது பாலியல் அடிமையாக விற்பனை செய்ய சர்வதேச சட்டம் தடை விதித்துள்ளது என்றும் இச்சம்பவம் தொடர்பாக போக்கோ ஹராமின் தலைவர் சூளுரைத்துள்ள வீடியோ பதிவு தொடர்பாக ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் எனவும் இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மலாலா வெளியிட்ட அறிக்கையில், 'கடத்தப் பட்ட மாணவிகளை அனைத்து மக்களும் தமது குழந்தைகளாக அல்லது சகோதரிகளாக எண்ணி அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எங்கோ நடக்கும் பிரச்சினை அல்ல! நாம் அமைதியாக இருப்பின் இது போன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்கள் பெருகி விடும்' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 Responses to நைஜீரியாவில் கடத்தப் பட்ட மாணவிகளை விடுவிக்க சர்வதேசத்துடன் ஐ.நா மற்றும் மலாலா வலியுறுத்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com