மேஷம்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். கொடுக்கல்&வாங்கல்கள் ஒழுங்காகும். தொழில் முன்னேற்றம் உண்டு. நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும்.
ரிஷபம்
மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழிலில் அக்கறை அதிகம் செலுத்துவீர்கள். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை உண்டு. அடுத்தவர் நலன்கருதி அதிகப் பிரயாசை எடுப்பீர்கள்.
மிதுனம்
உறவினர்கள் வருகையால் உள்ளம் மகிழும் நாள். செய்தொழிலில் மேன்மை கிட்டும். வாகனமாற்றச் சிந்தனை உருவாகும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். நீண்ட நாளையக் கனவு ஒன்று நனவாகும்.
கடகம்
வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். பழைய சடங்கு, சம்பிரதாயங்களில் நம்பிக்கை ஏற்படும். தொழில் வளர்ச்சியில் அக்கறை காட்டுவீர்கள்.
சிம்மம்
சிறப்பான நாள். சிந்தனை ஆற்றல் பெருகும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்வர்.
கன்னி
சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு பெண் வழி ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருள் வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
துலாம்
வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். பாதியில் நின்ற பணிகளை இன்று விரைந்து செய்து முடிப்பீர்கள். தந்தை வழியில் தனலாபம் வந்து சேரும். உறவினர்களும், நண்பர்களும் வலிய வந்து உதவுவர்.
விருச்சகம்
புகழ் கூடும் நாள். பொன்னான எதிர்காலத்திற்கு அடித்தளமிடுவீர்கள். பணத் தேவைகள் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
தனுசு
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். மற்றவர்கள் வியக்குமளவிற்கு உங்கள் திறமை பளிச்சிடும். வெளியூரிலிருந்து நற்செய்தி வந்து சேரும்.
மகரம்
முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். எந்தக் காரியத்தையும் சற்று ஆராய்ந்து செய்வது நல்லது. மாலை நேரத்திற்கு பிறகு மறக்க முடியாத இனிய சம்பவமொன்று நடைபெறும்.
கும்பம்
கவலைகள் அகல காக வாகனத்தானை வழிபட வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை தேவை. தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை. நண்பர்களால் சிறு ஏமாற்றத்தைச்சந்திக்க நேரிடலாம்.
மீனம்
சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கூடும் நாள். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். உற்றார், உறவினர்கள் வருகை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
0 Responses to இன்றைய ராசி பலன் 10-05-2014 | Raasi Palan 10-05-2014