Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

13ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குவது தொடர்பில் இந்தியாவின் புதிய அரசாங்கம் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாரதீயே ஜனதா கட்சியின் பேச்சாளர் நிர்மலா சீத்தாராமன் இதனைத் தெரிவித்துள்ளார். 

அயல் நாடுகளுடன் சீரான உறவினை பேணுவதற்கு, அந்தந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை பாரதீயே ஜனதா கட்சி முக்கிய கொள்கையாக கொண்டுள்ளது.

இதன்படி இந்த பேச்சுவார்த்தைகளில் இலங்கை குறித்த விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

இந்த நிலையில் இலங்கையில் முழுமையாக அதிகாரப் பகிர்வினை ஏற்படுத்தி, தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப் படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை பாரதீயே ஜனதா கட்சியின் அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Response to 13ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்க இந்தியாவின் புதிய அரசாங்கம் இலங்கையுடன் பேசும் - பா.ஜ.க

  1. at this moment we can't say how far it is true. wait and see.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com