Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம், மிருசுவிலில் கடந்த 2000ம் ஆண்டு 17ம்  திகதி அல்லது அதனை அண்மித்த தினத்தில் பொதுமக்கள் எட்டுபேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு, 14 வருடங்கள் கடந்தும் விசாரிக்கப்பட்டுக்கொண்டிருப்பது இலங்கையின் நீதித்துறையை கேலிக்குரியதாக்கியிருக்கின்றது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
      
விசேட மேல்நீதிமன்ற நீதிபதி ஜே.சுரசேன  மற்றும் லலித் ஜயசூரிய முன்னிலையிலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இந்த வழக்கு சாவக்கச்சேரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கொலைக்குற்றசாட்டுக்களிற்குள்ளான படையினரது வேண்டுகோளின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. அதன் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மிருசுவிலில் 2002 டிசெம்பர் 19 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் குணபாலன் ரவி வீரன், செல்லமுத்து திவகுலசிங்கம், வில்வராசா பிரதீபன்(13), நதீரன் ஜயசந்திரன், சின்னய்யா வில்வராசா(40), கதிர்காம சந்திரன் (35), ஞானசந்திரன் சாந்தன்(15) மற்றும் விவராசா பிரசாத் ஆகியோரை படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தில் பொன்னுதுரை மகேஷ்வரன் என்பவர் கடும் காயங்களுடன் தப்பியுள்ளார்.

சம்பவத்தையடுத்து அப்பகுதியிலுள்ள கஜபா படையணியில் கடமையாற்றிய  லெப்டினட் சேனக்க முனசிங்க, லான்ஸ் கோப்ரல்களான சுனில் ரத்நாயக்க,  ஜீ. எம்.ஜயரத்ன, கோப்ரல் காமினி முனசிங்க, படைச்சிப்பாய் புஷ்ப சமன் குமார ஆகியோர் வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். பொதுமகனான மகேஷ்வரன் என்பவரை தாக்கி காயப்படுத்தல், 8 பேரை கொலை செய்தல் உட்பட 19 குற்றச்சாட்டுகள் தொடர்பில் இவர்களுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கே 14 வருடங்களை தாண்டி இழுபட்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to 14 வருடங்கள் தாண்டி சாதனை! மிருசுவிலில் இராணுவத்தினர் நடத்திய படுகொலை!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com