Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழின அழிப்பின் ஐந்தாம்  ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் தமிழின அழிப்பு நடந்தேறிய மே 18 இல் உலகெங்கும் நினைவெழுச்சிப் பேரணிகள், அமைதி வழிப் போராட்டங்கள் , கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

அந்த வகையில் பெல்ஜியம் நாட்டிலும் தமிழின அழிப்பு நாள் மே 18 அன்று
பெல்ஜிய நாட்டின் சமூகத்தை  நோக்கி தமிழின அழிப்புக்கான நீதி கோரும் பேரணி நடைபெற இருக்கின்றது .

பன்னாட்டு அரசியல் மையமாக விளங்கும் பெல்ஜியம் தேசத்தில் நாம் ஒற்றுமையாக அணிதிரண்டு சர்வதேச அரங்கில் எமக்கான நீதியைக் கோரி போராடவேண்டும் .கடந்த மே 1 சர்வதேச தொழிலாளர் தினத்திலும் பல்லின சமூகத்துடன் இணைந்து எமக்கான நீதியை கோரி போராட்டம் நடந்தது இங்கு குறிப்பிடத்தக்கது .

பேரணி ஆரம்பிக்கும் இடம் : நினைவுக் கல்லறை நிறுவப்பட்ட திடலில் இருந்து
Antwerpen தொடரூந்து நிலையத்தை நோக்கி

நேரம் : 13:00 மணிக்கு

தொடர்புகட்கு : தமிழர் கலை பண்பாடுக் கழகம் - பெல்ஜியம்
                   0499826023  /  0493995599


1 Response to தமிழின அழிப்பு நாள் மே 18 - பெல்ஜியம் தமிழ் மக்களுக்கான அழைப்பு

  1. when come the photo???

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com