Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் சமீப காலமாகப் பெய்து வரும் கனமழை காரணமாக படக்‌ஷான் மாகாணத்திலுள்ள பண்டைய மலைக்கிராமம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை திடீரென ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் கிராமத்தின் பெரும் பகுதி சிக்கியது.

இதில் சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த 2700 பேருக்கும் அதிகமான மக்கள் பலியாகியிருக்கலாம் என படக்‌ஷான் மாகாண கவர்னரின் பேச்சாளர் நவீட் ஃபொரொடான் ராய்ட்டர் ஊடகத்துக்குக் கடைசியாகக் கூறிய தகவலில் தெரிய வந்துள்ளது.

எனினும் ஐ.நா அலுவலர்கள் 350 பேரின் மரணத்தையே உறுதி செய்துள்ளதுடன் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளது. தற்போது ஐ.நா இன் அனர்த்தம் முகாமைப் பிரிவு கவனம் செலுத்தி வரும் இந்தப் பேரழிவில் 4000 பேருக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் குறித்த பிரதேசத்தில் மேலும் சில நிலச்சரிவுகள் ஏற்படலாம் எனவும் கூறப்படுகின்றது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மீட்புப் பணி கடினமானதாக மாறியுள்ளதுடன் இதில் அரச அதிகாரிகளுடன் இணைந்து 600 இற்கும் அதிகமான பக்கத்து கிராமத்து மக்களும் ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தைத் தோண்டும் கருவிகள் பற்றாக் குறையாலும் கன மழை காரணமாகவும் இதுவரை 100 சடலங்களே மீட்கப் பட்டுள்ளன. மேலும் குறித்த கிராமத்திலுள்ள 75% வீதமான வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.

இதேவேளை வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நிலச்சரிவு ஏற்படும் போது குறித்த கிராமத்தில் ஓரு திருமணக் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட படக்‌ஷான் மாகாணம் மட்டுமே ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் ஆளும் போது அவர்களினால் ஆட்சி செய்யப் படாத ஒரேயொரு மாகாணம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலச்சரிவு!:2700 பேருக்கும் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் எனத் தகவல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com