Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு உக்ரைனில் உக்ரைன் இராணுவத்தினரின் இரு ஹெலிகாப்டர்களை ரஷ்ய ஆதரவுப் படையினர் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து தெற்கு துறைமுக நகரான ஒடெஸ்ஸாவில் இரு தரப்புக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 45 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகரித்துள்ள இவ்வன்முறைகளினால் உக்ரைனில் சிவில் யுத்தம் தொடங்குவதற்கான அச்சம் அதிகரித்துள்ளது.

க்ரமடோர்ஸ்க் பகுதியில் உக்ரைன் இராணுவம் தொலைக்காட்சி ஒளிபரப்புக் கோபுரத்தையும் கைப்பற்றியது. இம்மோதல்களினால் ஐ.நா பாதுகாப்புச் சபையில் அவசரக் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் கிழக்கு உக்ரைனில் ஒரு வாரமாக ரஷ்யா ஆதரவுப் படையால் தடுத்து வைக்கப் பட்டிருந்த OSCE அமைப்பின் கண்காணிப்பாளர்களும் விடுவிக்கப் பட்டுள்ளனர்.

இம்மாதம் 25 ஆம் திகதி உக்ரைனில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு அதிகரித்து வரும் வன்முறைகளை நிறுத்துமாறும் இல்லாவிட்டால் பொருளாதாரத் தடை வலுப்படும் எனவும் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஜேர்மன் சேன்சலர் ஏஞ்சலா மேர்கெல் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ரஷ்யாவோ கிழக்கு உக்ரைனில் தான் கைப்பற்றிய நகரங்களில் வரும் 11 ஆம் திகதியே கிரிமியாவில் நடத்திய வாக்கெடுப்பைப் போல் நடத்தி தன்னுடன் இணைக்கும் பணியில் முனைப்புக் காட்டி வருகின்றது. இதனாலும் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் படைக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல்!:45 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com