Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 28-05-2014 | Raasi Palan 28-05-2014

பதிந்தவர்: தம்பியன் 28 May 2014

மேஷம்
மகிழ்ச்சி கூடும் நாள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற துடிப்போடு செயல்படுவீர்கள். அஞ்சல் வழியில் ஆச்சர்யமான தகவல் வந்து சேரலாம்.

ரிஷபம்
கனவுகள் நனவாக கார்த்திகேயனை வழிபட வேண்டிய நாள். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு பெண்வழி ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்
முன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். கூட்டுத் தொழில் தனித் தொழிலாக எடுத்த முயற்சி வெற்றி தரும். பயணத்தால் நல்ல தகவல்களைப் பெறுவீர்கள். விரயங்கள் மேலோங்கும்.

கடகம்
பாக்கிகள் வசூலாகி பரவசப்படும் நாள். பணவரவு அதிகரிக்கும். உங்கள் மணியான யோசனைகளுக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும்.

சிம்மம்
தொட்ட காரியங்களில் வெற்றி பெறும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வீடு வந்து சேரலாம். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி
முன்னேற்றம் கூட முருகப் பெருமானை வழிபட வேண்டிய நாள். முன்னேற்றத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். பொன்-பொருள் சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.

துலாம்
கவலைகள் தீரக் கந்தனை வழிபட வேண்டிய நாள். சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். செலவுகள் வரிசையாக வந்து கொண்டேயிருக்கும். வாகனப் பழுதுகள் ஏற்படலாம்.

விருச்சகம்
முன்னேற்றம் கூட முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். வரவு திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண முயற்சி வெற்றி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

தனுசு
தடைகள் விலகும் நாள். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்று மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு. அரசியல்வாதிகளால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள்.

மகரம்
வெளியுலகத் தொடர்பு விரிவடையும் நாள். தொழில், வியாபாரத்தில் அனுபவம் நிறைந்த ஆட்கள் வந்து சேர்வர். கல்யாணக் கனவுகள் நனவாகும். ஆடை-ஆபரண சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.

கும்பம்
விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். பணம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். அரசியல்வாதிகளின் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.

மீனம்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

0 Responses to இன்றைய ராசி பலன் 28-05-2014 | Raasi Palan 28-05-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com