Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவின் சாலைக் கடற்பரப்பில் கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்ட வானூர்தியின் பாகங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தினுடையது என்று பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்படைத் தலைமையகம் அமைந்திருந்த சாலைக் கடற்பரப்பில் வைத்து 1997ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் விடுதலைப் புலிகளினால், விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ.24 ரக ரஷ்யத் தயாரிப்பு தாக்குதல் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது. அதனுடைய பாகங்களே 17 வருடங்களுக்குப் பின்னர் நேற்று மீட்கப்பட்டிருந்தன.

இதனிடையே, குறித்த தாக்குதல் வானூர்தியில் இரண்டு விமானிகள் உள்ளிட்ட 8 விமானப் படை வீரர்கள் பயணம் செய்திருந்ததாகவும், அவர்களில் இருவரது உடலங்கள் மாத்திரமே அப்போது கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பலாலி விமானப்படைத் தளத்திலிருந்து ஹிங்குரங்கொட விமானப்படைத் தளத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போதே குறித்த வானூர்தி விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானப்படை வானூர்தியின் பாகங்களே மீட்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com