Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைப்பெற்றதுத் தொடர்பான வழக்கில் இறுதிக் கட்ட விசாரணைக்காக ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டவர்கள்  இன்று தங்களது வாக்கு மூலத்தைப்  பதிவு செய்து வருகின்றனர்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இரண்டு குற்றப்பத்திரிகைகள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை இன்று மீண்டும் தொடங்குகிறது. 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி, ராஜாத்தி அம்மாள் உள்ளிட்ட அனைவரும் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது வாக்கு மூலங்களைப்  பதிவு செய்து வருகின்றனர்.  

கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்துக்கு பணப்பரிவர்த்தனை செய்ததுத் தொடர்பாக கனிமொழி, ராஜாத்தி அம்மாள் உள்ளிட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருவதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டவர்கள் வாக்குமூலம் பதிவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com