வவுனியா கணேசபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாடு செல்ல முற்பட்ட வேளை இன்று திங்கட்கிழமை காலை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயன்றதாக கூறி அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பனுக்கு உதவியதாக கூறி வவுனியா, கணேசபுரத்தைச் சேர்ந்த கணேசன் றேகன் (வயது30) என்ற இளைஞன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த இளைஞனின் தந்தையார் கறுப்பையா கணேசன் (வயது 54), அப்பனுக்கு உதவிய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to வவுனியா இளைஞர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது!