Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிதம்பரம் மாரியப்பன் நகர் 2வது குறுக்குத்தெருவை சேர்ந்த புரபசர் பன்னீர்செல்வம் வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.   இந்த வீட்டில் இன்று வெடிகுண்டு வெடித்தது.  வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த நபர் ஒருவர் படுகாயமடைந்தார்.  அவரை அறையில் இருந்து சிலர் ஆட்டோவில் ஏற்றிச்சென்று  தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ஓடிவிட்டனர்.

 அந்த மர்ம நபர்கள் குறித்தும், குண்டுவெடிப்பு குறித்தும் போலீசார் விசாரித்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில், படுகாயமடைந்த அந்த நபர் திண்டுக்கல் ரவுடி மோகன்ராம் என்று தெரியவந்துள்ளது.  என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி மெட்ராஸ் பாண்டியின் கூட்டாளி இவன் என்பதும் தெரிய வந்துள்ளது.  இவன் மீது 3 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.

அந்த வீட்டில், டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, கைதுப்பாக்கி இருந்துள்ளது.  அவற்றை போலீசார் கைப்பற்றி யுள்ளனர்.   மேலும்,ஒரு டிபன் பாக்ஸ் குண்டு தயாரிக்கும்போதுதான் அது வெடித்துள்ளது என்றும் விசார ணையில் தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் ரவுடி ஏன் சிதம்பரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தான்? எந்த நோக்கத்திற்காக துப்பாக்கி, டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் தயாரித்தான்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருந்த மோகன்ராம், குண்டுவெடிப்பின் மூலம் சிக்கியுள்ளான்.

0 Responses to சிதம்பரத்தில் குண்டுவெடிப்பு: சிக்கினான் பிரபல ரவுடி திண்டுக்கல் மோகன்ராம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com