Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளரும், தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களை சர்வதேச சமூகம் சாதகமாக நோக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் மிக நெருங்கிய தொடர்புகள் மிக நீண்ட காலமாக பேணப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த உறவுகளின் மூலம் இரு நாடுகளும் நன்மை அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

பயங்கரவாத்திற்கு நிதி வழங்குதல் மற்றும் சட்டவிரோத நிதி கொடுக்கல் வாங்கல்களை தடுக்க அமெரிக்க மேற்கொண்ட முனைப்பு பாராட்டுக்குரியது. மனித உரிமை, ஜனநாயகம், பயங்கரவாதம் போன்றன தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் பொதுவான நிலைப்படே காணப்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது: கெஹலிய ரம்புக்வெல

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com