பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக கூறி புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடை தொடர்பில் சரியான ஆதாரங்களை எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீது தடையை விதித்துள்ளது. ஆனாலும், அதற்கான ஆதாரங்களை இன்னமும் வெளியிட்டிருக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் டலி குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அமைப்பு ஒன்றைத் தடை செய்வது என்பது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் பொறுத்த வரையில் மிகவும் பாரதூரமான விவகாரம். இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள தடைப் பட்டியலை ஏற்பதற்கு தேவையான ஆதாரங்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இலங்கை அரசாங்கம் அதனை வெளிப்படுத்தினால் மட்டுமே நிலைமைகளை ஆராய முடியும். முடிவெடுக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடைக்கான காரணங்களை இலங்கை வெளியிட வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்