மோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நல்ல நண்பர்கள். தேர்தல் முடிவுகளின் படி பாஜக ஆதரவு கோரினால் ஆதரவு வழங்குவது குறித்து தமிழக முதல்வர் யோசிப்பார் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த அதிமுக முன்னாள் எம்.பி மலைச்சாமி, அக்கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முன்னாள் எம்.பியுமான மலைச்சாமியை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். முன்னதாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் 'நரேந்திர மோடி தலைமையிலான ஜனநாயக முன்னணி பெரும்பான்மை பெறத் தவறும் நிலையில், அது வெளியிலிருந்து ஆதரவை நாடினால், அதற்கு ஆதரவு தருவது குறித்து தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா முடிவெடுப்பார் என பேட்டியளித்திருந்தார்.
மேலும், ஜெயலலிதா திறந்த மனதுடையவர். யாருமே நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர எதிரிகளும் இல்லை. ஜெயலலிதா மோடியின் நல்ல நண்பர். எப்படி அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என பொருத்திருந்து பார்ப்போம் என அவர் கூறியிருந்தார்.

0 Responses to ஜெயலலிதா மோடியின் நல்ல நண்பர் என சொன்ன அதிமுக எம்.பி கட்சியிலிருந்து நீக்கம்