ஜேர்மனி மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளின் அரசியல் அமைப்பை ஒத்த புதிய அரசியல் அமைப்பு ஒன்றை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்ரமசிங்க தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதன் பொருட்டே அவர் ஒரு மாத கால அமெரிக்க பயணத்தை மேற்கொண்டிருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
அமெரிக்காவும், இந்தியாவுக்கும் அவருக்கான ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பெயர் கூறாத முக்கிய உறுப்பினர் ஒருவர், பதிவு இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.
இதன்படி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்க, வெற்றிபெற்றால், உடனடியாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வார்.
அதற்கு பதிலாக ஜேர்மனியில் இருப்பதைப் போன்று, அதிர்பர் முறைமையை இலங்கையில் அறிமுகப்படுத்த ரணில் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to ஜேர்மனி மற்றும் நியுசிலாந்து நாடுகளை ஒத்த அரசியல் அமைப்பை தயாரித்து வருகிறார் ரணில்