Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இளம் இந்திய மாணவ விஞ்ஞானிகள் 4 பேருக்கு அவர்களின் கண்டுபிடிப்புகளுக்காக அமெரிக்காவின் தங்கம் மற்றும் வெள்ளி விருதுகள் கிடைத்துள்ளன.

 இந்திய அறிவியல் கழகம் மற்றும் தனியார் கல்லூரிகள் இணைந்து நடத்திய கண்காட்சி நிகழ்வில், புதிய கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் மிகச்சிறந்த இளம் விஞ்ஞானிகளை தேர்வு செய்து அமெரிக்காவுக்கு அனுப்பி வருகிறது.

இம்முறை 500 மாணவ, மாணவிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இவற்றின் இறுதிப் போட்டி சென்னையில் நடந்த போது,  தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் இயங்கும் இந்து மேனிலைப் பள்ளி மாணவன் டெனித் ஆதித்யாவிற்கு, தங்க விருது கிடைத்துள்ளது. இந்து மேல்நிலை பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் இவர், புதுமை தொழில்நுட்பத்தின் மூலம் வாழை இலையை ஒரு வருட காலம் வாடாமல் பசுமையாக வைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.

இதேபோல, சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த ஆஞ்செனஸ் என்ற மாணவனுக்கு வெள்ளி விருது கிடைத்துள்ளது. இவர் கார்பன்டை- ஆக்சைடில் இருந்து பயோ-டீசல் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளார். மேலும், குஜராத்தை சேர்ந்த மான்சி டல்சானை மற்றும் கைரவி ரட்சியா ஆகியோர் கூட்டு சேர்ந்து கழிவு பிளாஸ்டிக்கை பயன்படுத்தி செங்கல்கள் தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதனால், இவர்களுக்கும் வெள்ளி விருது வழங்கப்பட்டது. அமெரிக்க விருது பெற்றதனால் அமெரிக்கா தன் பக்கம் இவர்களை ஈர்ப்பதற்கு முயற்சிக்கும். இவர்களுடைய கண்டுபிடிப்புக்கள் இந்தியாவிற்கு உதவுமா என்பது இவர்களது கைகளிலேயே தங்கியுள்ளது.

இதேவேளை அமெரிக்காவில் கல்வி பயிண்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. 113,000 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 290,000 மாணவர்களுடன் சீனா முதலாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய மாணவர்கள் பெரும்பாலும் அறிவியல், விஞ்ஞானம் போன்ற துறைகளில் ஆர்வம் காட்டுவதாக அந்நாட்டுக் குடியேற்றுத் துறை தெரிவித்துள்ளது.

0 Responses to ஒரு வருடத்திற்கு வாடாமல் இருக்கும் வாழை இலை கண்டுபிடிப்புக்காக தமிழக மாணவனுக்கு அமெரிக்க விருது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com