இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் பல ஒன்றுமைகள் இருப்பதாக அரசியல் விமர்சகரும் முன்னாள் இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்தார்.
இதனால் இலங்கைக்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள் நலன் கொடுக்கும் வகையில் இருக்க அதிக வாய்ப்புள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசாங்கம் மாற்றும் புரட்சியானது கண்டிப்பாக இலங்கையிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக இந்தியா இதுவரை கொடுத்து வந்த அழுத்தங்கள் நரேந்திர மோடியில் ஆட்சியிலும் தொடரும்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் நல்லெண்ணத்தை தக்கவைத்திருக்க வேண்டுமாயின், காலதாமதம் இன்றி அந்த திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.
இந்தியா கொண்டுள்ள இந்த நிலைமையின் கீழ் இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டம் செயற்படுத்தப்படுவதை தொடர்ந்தும் தாமதித்தால், நண்பன் பகைவனாக கூடும்.
நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி இந்து இனத்தை அடிப்படையாக கொண்டு கட்டியெழுப்பட்ட அரசியல் சக்தி என்பதால், புதிய ஆட்சியின் கீழ் இந்தியா முன்னரை விட பலமான இந்து நாடாக எழுச்சி பெறும்.
இதனால் ஏற்படும் தாக்கங்கள் இலங்கைக்கு மாத்திரமல்லாது, இந்தியா நோக்கிய மேற்குலக நாடுகளின் அணுகுமுறையிலும் இந்தியா - பாகிஸ்தான் உறவுகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மகிந்தவுக்கும் மோடிக்கும் பல ஒற்றுமைகள்: இராஜதந்திரியின் கண்டுபிடிப்பு