Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு மத்திய அரசாங்கம் தடையாக உள்ளதா என்பது தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு வடக்கு மாகாண ஆளுநரும், மத்திய அரசாங்கமும் தடையாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருவதாகவும், இது உண்மையா? பொய்யா? என்பது தொடர்பில் பகிரங்க விவாதமொன்றை சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நடத்துவதற்குத் தான் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சகல அதிகாரங்களும் இருக்கின்றன. வடக்கு, கிழக்கில் எம்மிடமிருக்கும் 3 பாராளுமன்ற உறுப்பினர்களைவிட, ஏனைய 14 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வைத்துள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் யாழ் மாவட்டத்தில் எம்மிடமிருக்கும் 4 உள்ளூராட்சி சபைகளைவிட ஏனைய அனைத்து உள்ளூராட்சி சபைகளும் கூட்டமைப்பினரிடம் உள்ளது. இதனைவிட அரிய வாய்ப்பான வடக்கு மாகாண சபையின் அதிகாரமும் அவர்களிடம் உள்ளது. இத்தனை அதிகாரங்களையும் வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையென பொய்யுரைத்து வருகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பகிரங்க விவாதத்துக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com