Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் பாதுகாப்பற்ற உட்கட்டமைப்பால் இந்தியாவிற்குத் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ளதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று அமெரிக்க வெளியுறவுத் துறை கருத்து தெரிவித்துள்ளது.

சென்னையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து இதற்கு கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை, இந்தியாவின் உட் கட்டமைப்பு என்பது அவ்வளவு பாதுகாப்பு நிறைந்தவையாக இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும் எல்லைகளின் பாதுகாப்பு வீரர்கள் தங்களது பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும், அப்படிப் பாதுகாப்புப் பலப்படுத்தப்படாத பட்சத்தில் பயங்கரவாத தீவிரவாதிகளின் மையமான பாகிஸ்தான் வழியாக தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்றும் அமெரிக்காவின் அறிக்கை தெரிவிக்கிறது.

தேசியப் பாதுகாப்புப் படை, தேசியப் புலனாய்வுப் பிரிவு  முதலியவர்களும் தங்களது பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.

0 Responses to இந்தியாவின் பாதுகாப்பற்ற உட்கட்டமைப்பால் தீவிரவாத அச்சுறுத்தல்:அமெரிக்கா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com