Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்  என்பது முழு சென்னைக்கும் வைக்கப்பட்ட தாக்குதல்களுக்கான முன்னோட்டம் என்று கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் சென்னை சென்ட்ரல் ரயில்  குண்டுவெடிப்பு சம்பவம்  நிகழ்ந்ததை அடுத்து, நேற்று சென்னையின் ஆவடி ரயில் நிலையம், தனியார் வணிக வளாகம், தனியார் கல்லூரி போன்ற இடங்களுக்கும் வெடி குண்டு மிரட்டல்கள் வந்தன. தீவிர சோதனைக்கு பின்னர் இது வெறும் புரளி என்று கண்டறியப் பட்டாலும், இது சென்னைக்குக் குறி வைத்த தாக்குதல் தான் என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளும்  இதை உறுதி செய்யும் விதத்தில் தான்  இருப்பதாக காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கவுஹாத்தி ரயில் காலை 7.15 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், சிவப்பு நிற பையுடன் இருவர் அவசரமாக ரயிலில் ஏறியுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து இருவரும் இறங்கியபோது கையில் அந்த சிவப்பு நிறப்பை இல்லை. அடுத்த சிறிது நேரத்தில்  குண்டு வெடித்துள்ளது. அடுத்த அரை  மணி  நேரத்தில் மோப்பநாய் ரயிலுக்கு அடியில் கிடந்த அந்த சிவப்பு நிறப் பைகளை  எடுத்துக் கொடுத்துள்ளது. பையை ஆராய்ந்த நிபுணர்கள் அதில் வெடிப்பொருள் வாசனை மற்றும் துகள்கள் உள்ளதை உறுதி செய்துள்ளனர்.

மேற்கண்டத் தகவல்கள் வெடி குண்டுகள் சென்னைக்குக் குறிவைத்து வைக்கப்பட்டது தான் என்று உறுதியாகியுள்ளதாக  தெரிய வந்தாலும், அதை விசாரணை மூலம் தான் உறுதிப் படுத்த முடியும் என்பதும் சிபிஐ தெரிவிக்கும் தகவலாக உள்ளது. இதற்கிடையில் ரயில் வந்தவுடன் அவசரமாக வெளியே செல்லும் ஒரு நபரின் உருவமும் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. அவரைக் கண்டு பிடித்து விசாரணை நடத்தும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.

0 Responses to சென்னைக்கு குறிவைத்த வெடிகுண்டுத் தாக்குதல் தானா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com