Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளை, தேசிய துக்க நாளாக மாற்றுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது மனித நேயச் செயற்பாட்டாளர் திரு.கஜன் அவர்கள் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளி வாய்க்கால் தமிழின அழிப்பு நாளை, தேசிய துக்க நாளாக மாற்றுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. தேசிய துக்க நாளானது ஒரு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கோ அல்லது சுனாமி போன்று இயற்கை அனர்த்தினால் உயிரிழந்த மக்களுக்கு அல்லது ஒரு நாட்டின் அரச தலைவர் உயிரிழந்திருந்தால் போன்ற சம்பவங்களை நாங்கள் தேசிய துக்க நாளாக நினைவு கூரமுடியும்.

முள்ளிவாய்க்காலில் சிங்கள இனம், தமிழ் இனத்தை திட்டமிட்டு அழித்திருக்கிறது. ஓர் இனத்தை அழித்த நாளை இன அழிப்பு நாளாகவே நினைவுகூரமுடியும். நாங்கள் ஒவ்வொரு அரச அலுவலங்களிலும் படியேறி இது ஓர் இனவழிப்பு என்பதை வலியுறுத்தி நீதியை வேண்டி தெருத் தெருவாக, நாடுநாடாக அலைகின்றோம். இந்த நிலையில் ஒரு முட்டாள் கூட்டம் இதனை தேசிய துக்க நாளாக கடைப்பிடிக்க முனைவது சிறீலங்கா, இந்திய புலனாய்வு நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய ஓரு இன அழிப்பை திட்டமிட்டு மூடி மறைக் முனைகிறார்கள் என அவர் கூறியுள்ளார்.

0 Responses to தமிழின அழிப்பு நாளை தேசிய துக்க நாளாக மாற்ற முனையும் ஒரு மூடர்கூட்டம் - திரு.கஜன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com