நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளக் கூடாது என்று, சென்னையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
நாளை பிரதமராகப் பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜ்கபக்ஷேவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து ராஜபக்ஷேவும் இன்று டெல்லி வந்துள்ள நிலையில், இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.
இதே போன்று நடிகர் ரஜினிகாந்துக்கும் மோடி அழைப்பு விடுத்துள்ளார். ரஜினிகாந்த் இந்தப் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க வேண்டும் என்றும், ராஜபக்ஷே கலந்து கொள்ள உள்ள விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கக் கூடாது என்றும் சென்னையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். காவல் துறை இவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள எதிர்ப்பு!