கூட்டணிக் கட்சி என்கிற முறையில் பாஜக ஆட்சியை எப்படி எதிர் கொள்வது என்று மதிமுகவின் உயர்நிலைக்குழுக கூடி ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாளை நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள நிலையில், அவரது பதவியேற்பு விழாவில் தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணிக் கட்சியில் உள்ள மதிமுக கலந்து கொள்ளவில்லை. காரணம் மோடி தமது பதவி ஏற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்தது என்பது தமிழர்கள் வெறுக்கக் கூடிய விஷயம் என்பதுதான். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை வைகோ போராட்டம் நடத்த உள்ளார்.
இந்த நேரத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ள பாஜகவுடன் மதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசை எப்படி எதிர்கொள்வது என்று ஆலோசிக்க மதிமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இம்மாதம் 29ம் திகதி கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் சென்னையில் உள்ள மறுமலர்ச்சி திமுக அலுவலகமான தாயகத்தில் நடைப்பெறும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

0 Responses to கூட்டணிக் கட்சி என்கிற முறையில் பாஜகவை எப்படி எதிர்க்கொள்வது?: மதிமுக ஆலோசனை!