Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியப் பிரதமராகும் மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் புறக்கணிகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வுக்கு இனப்படுகொலையாளியும் கொடுங்கோலனுமாகிய மகிந்த ராஜபக்ச விருந்திராக அழைக்கப்பட்டதைக் கண்டித்தே பதவிப் பிரமாண நிகழ்வுக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நாளை நடைபெறவுள்ள பதவிப்பிரமாண விழாவைப் ஜெயலலிதா புறக்கணிக்கவும் தீர்மானித்துள்ளார். இவ்விழாவுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக யாரும் பங்கேற்கப் போவதில்லை எனவும் தமிழகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேநேரம் ம.தி.மு.க மற்றும் தி.மு.கவும் கடுமையாக கண்டனங்களை வெளியிட்டிருந்தன. இந்தநிலையில் பா.ம.க வும், தே.மு.தி.க வும் உறுப்பினர்களாவும் குடும்பமாகவும் விழாவில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது.

0 Responses to மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வைப் புறக்கணிக்கிறார் ஜெயலலிதா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com