அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் சிஐஏ இன் வழிகாட்டலுடன் அமெரிக்கப் படைகளால் 2011 மே மாதம் சுற்றி வளைக்கப் பட்டு கொல்லப் பட்டதற்கு உதவி புரிந்தவர் பாகிஸ்தான் டாக்டர் சகில் அஃப்ரிடி ஆவார்.
இவர் மீது பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக் கிழமை டாக்டர் சகிலின் வக்கீல் சமியுல்லா கான் தான் இனிமேலும் டாக்டர் சகிலுக்காக வாதாடப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அரசே ஒசாமாவைக் காட்டிக் கொடுத்த டாக்டர் சகில் விடுதலை செய்யப் பட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் இவரின் வக்கீல் இத் திடீர் முடிவை எடுக்கக் காரணமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் இருந்து இவருக்கு மரண அச்சுறுத்தல் விடுவிக்கப் பட்டதாகக் கூறப்படுகின்றது. இது குறித்து AP ஊடகத்துக்கு டாக்டர் சகிலின் வக்கீல் சமியுல்லா கருத்துத் தெரிவிக்கையில், 'சகிலுக்காக வாதாடுவதை நான் உடனே நிறுத்த வேண்டும்! இல்லாவிட்டால் நானும் எனது குடும்பத்தினரும் தீவிரவாதிகளால் கொல்லப் படுவோம்' என அச்சுறுத்தப் பட்டதாகக் கூறியுள்ளார்.
டாக்டர் சகிலும் அவரது வக்கீலும் நெருங்கிய தொடர்பு இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இவ்விவகாரம் தொடர்பாக இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டனர். ஏற்கனவே சகில் அஃப்ரிடி இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு மருத்துவ மற்றும் பண உதவி செய்த குற்றத்துக்காக 2012 மே மாதம் பாகிஸ்தான் நீதிமன்றத்தால் 33 வருட சிறைத் தண்டனை விதிக்கப் பட்டிருந்தார். இதில் இவர் சிஐஏ இற்கு உதவிய விவகாரம் சம்பந்தப் படவில்லை. எனினும் மறு முறைப்பாட்டைத் தொடர்ந்து பாகிஸ்தான் நீதிமன்றம் இத்தண்டனையை 23 வருடங்களாகக் குறைத்துத் தீர்ப்பளித்தது.
எனினும் பின்னர் பாகிஸ்தான் மண்ணில் அந்நிய தேசத்தின் சட்ட விரோத ஆப்பரேஷனுக்கு உதவி செய்த குற்றச்சாட்டின் கீழ் பாகிஸ்தான் நீதிமன்றம் இவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to பின்லேடன் வேட்டைக்கு சிஐஏ இற்கு உதவிய பாகிஸ்தான் டாக்டரின் வக்கீல் விலகல்!:மரண அச்சுறுத்தல்