ஊழல், மோசடி, பயங்கரவாதம் உள்ளிட்டவற்றை கற்க வேண்டுமாயின் (அம்பந்தோட்டையின்) மெதமுலனவுக்கு சென்றிருப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கற்பிப்பதற்கு வருமாறு அமெரிக்காவிலிருந்து கிடைத்த அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றதாவும் அவர் கூறியுள்ளார்.
சிறிகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசியல் விரிவுரைகளில் பங்குபற்றுவதற்காகவும், கற்பிப்பதற்காகவும் அமெரிக்காவுக்கு அண்மையில் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ‘அரசாங்கத்தை கவிழ்க்க அமெரிக்கா செல்லத் தேவையில்லை. மெதமுலன வந்தால் அரசாங்கத்தை கவிழ்ப்பது எப்படி என்று கற்பிக்க முடியும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அண்மையில் நாடு திரும்பிய ரணில் விக்ரமசிங்க இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதியின் கருத்துக்கு பதிலளித்தார். அதில், ‘ஊழல், மோசடி, பயங்கரவாதம் மற்றும் கடைத்தனம் உள்ளிட்டவற்றை கற்க வேண்டுமாயின் மெதமுலனவுக்கு சென்றிருப்பேன்’ என்றுள்ளார்.
அம்பந்தோட்டையின் மெதமுலன என்ற பகுதியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஊழலையும், மோசடியையும் கற்பதற்கு மெதமுலன சென்றிருப்பேன்: மஹிந்தவுக்கு ரணில் பதில்!