Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தானிய தீவிரவாதத்துக்கும், இலங்கைக்கும் இடையிலான தொடர்பு இன்று நேற்று வந்த ஒன்று இல்லை என்று, முன்னாள் இந்திய புலனாய்வுத் தலைவர் கேர்ணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

அவரது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000ம் ஆண்டு காலப்பகுதியில் மறைந்த இந்திய புலனாய்வுத் தலைவர் பி.ராமன் வெளியிட்டிருந்த நூல் ஒன்றில், பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கும், இலங்கைக்கும் இடையிலான தொடர்பு விளக்கப்பட்டிருந்தது.

இதில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை இலக்கு வைத்து,  அல்கைதா தீவிரவாதிகள் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

அந்த வகையில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் இந்தியாவில் தங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, இலங்கையை மையமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

அவர்களுக்கு இலங்கையில் வைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கைக்கும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் இடையிலான தொடர்பு புதிதல்ல!: கேர்ணல் ஹரிகரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com