Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் நீடித்துவரும் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்த கோரிக்கைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து வைப்பதற்கான அனுசரணையாளராக இருப்பதற்கு தென்னாபிரிக்கா உதவ முன்வந்துள்ள நிலையில், அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கையாகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தினை பார்க்கவேண்டியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் எனக் கூறும் டக்ளஸ் தேவானந்தா, நல்ல பல சந்தர்ப்பங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டாலேயே வெற்றிபெறவில்லை என்றும், அதுபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படக் கூடாது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டின் வடக்கே இராணுவத்தின் பிரசன்னம், ஆட்கள் கைது செய்யப்படுவது போன்ற பிரச்சினைகளையே தீர்க்க முடியாத அமைச்சரால், இனப்பிரச்சினைக்கான தீர்வில் என்ன பங்காற்ற முடியும் எனக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தடைபட்டுள்ளன. ஆனாலும், பாராளுமன்றத் தெரிவுக் குழுவினூடே இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு காணப்படும் என்று அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றது.

0 Responses to பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க கோரும் ஈபிடிபியின் அழைப்பை த.தே.கூ நிராகரிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com