தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் இயங்குவதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.
புலம்பெயர் அமைப்புக்களினூடு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பில் ஈடுபடுவதை பயங்கரவாதம் தொடர்பில் அமெரிக்கா வெளியிடும் வருடாந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அத்தோடு, தமிழீழ விடுதலை புலிகள் இலங்கைக்கும், சர்வதேசத்திற்கும் தற்போதும் அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது என்று இராணும் கூறியுள்ளது.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசும் போதே இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் அதன் சர்வதேச தொடர்புகள் மூலம் வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஆதரவுடன் ஆயுதங்கள், நிதிகள் மற்றும் தேவைகளை பெற்றுவருவதாக அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புலிகள் அதன் செயற்பாடுகளுக்கு நிதி சேகரிக்கவும் நிதிகளை அனுப்பவும், தர்ம நம்பிக்கை நிதியங்களை முகப்பாக பயன்படுத்தி வருகின்றது என்று அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி வழங்கும் முகமாக வெளிநாடுகளில் இயங்கும் பல குழுக்களையும், தனியாட்களையும் இலங்கை அரசாங்கம் அண்மையில் பட்டியலிட்டுள்ளது. இதுவரையில் கனடா மட்டுமே அந்தப் பட்டியலை ஏற்கப்போவதில்லையென தெரிவித்திருப்பது, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக பொருள்படும் என்று ருவான் வணிகசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் இயங்குவதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது: இராணுவம்