இலங்கையின் இனமுரண்பாடுகளுக்கான இறுதித் தீர்வு பாராளுமன்றத் தெரிவுக் குழுவினூடே எட்டப்பட வேண்டும் என்கிற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏதும் இல்லை இல்லை என்று தகவல் ஊடகத்துறை அமைச்சரும், அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தீர்வொன்று குறித்துப் பேச விரும்பினால், அரசாங்கம் அவர்களை பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமாறு ஏற்கனவே அழைப்பு விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும் போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக மாத்திரமே இறுதித் தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஏற்கனவே பல தடவைகள் அழைப்பு விடுத்துள்ளோம். இந்தியா உட்பட பல நாடுகளும், அவர்களை தெரிவுக்குழுவுக்குச் செல்லுமாறு வலியுறுத்தியபோதும் அவர்கள் இதுவரை தெரிவுக்குழுவிற்கு வரவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தென்னாபிரிக்காவின் உண்மையை அறியும் குழுவின் அனுபவங்களைப் பெற்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகவிருந்தாலும், அது பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. சகல தரப்பினருடனும் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும். எவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் இறுதியில், அது பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். எனவே ஆரம்பத்திலிருந்தே பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக பேச்சுவார்த்தைகளை முன்கொண்டு செல்வது சிறந்ததாக அமையும் என்று கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இனமுரண்பாடுகளுக்கான இறுதித் தீர்வு தெரிவுக்குழுவினூடே எட்டப்படும்: அரசாங்கம் உறுதி!