இலங்கை இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்று வந்த தன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன், தானும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவமொன்று முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அருமைநாயகம் அருள்ராஜ் (வயது 30) அவரது மனைவியான அருள்ராஜ் செல்வகுமாரி (வயது 28) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் அண்மையில் இராணுவத்திற்கு பெண்களை இணைக்கும் பிரச்சார நடவடிக்கையின் கீழ் குறித்த பெண்ணான அருள்ராஜ் செல்வகுமாரி பயிற்சிக்கு சென்றுள்ளார். உயிரிழந்த அருள்ராஜ் சிவில் பாதுகாப்புப் படையில் கடமையாற்றி வருகிறார்.
இந்நிலையில் இரு குழந்தைகளும் அநாதையாக விடுக்கப்பட்டதாக கவலை கொண்ட அவர் தற்கொலைக்கு முற்பட்டு தப்பித்துள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்தை பார்வையிட செல்வகுமாரி கடந்த பத்து தினங்களிற்கு முன்னதாக விடுமுறையில் வந்துள்ளார்.
இந்நிலையில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக படுக்கையிலிருந்த மனைவியை, கணவன் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளாதாக 3 வயது குழந்தை சாட்சியமளித்துள்ளது.
பின்னர் வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் சென்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக பொலிஸ் தரப்பினில் கூறப்படுகின்றது. இவர்கள் இருவருக்கும் இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்களின் 3 வயதுப் பிள்ளை அயலவர்களுக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரண்டு சடலங்களையும் நீதிவானின் உத்தரவிற்கமைய புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

0 Responses to இராணுவப் பயிற்சிக்கு போன மனைவியை வெட்டிக்கொன்றார் கணவர்!