இறுதி மோதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு வருமாறு யாழ் பல்கலைக் கழகத்தின் ஆசிரியர் சங்கம் பொது மக்களை அழைத்துள்ளது.
இறுதி மோதல் களமான முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் மே 18ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டுகின்றன. ஆனாலும், மே18 நினைவு நிகழ்வுகளை முன்னெடுக்க முடியாது என்று இராணுவம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையிலேயே, வன்னியில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வது சட்டத்துக்கு முரணானது அல்ல என்று தெரிவித்து பொதுமக்களை நினைவு கூர வருமாறு யாழ் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் மூலம் கேட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'அன்பான எம் உறவுகளே. மே மாதம் என்றதும் எமது உறவுகள் கொத்துக் கொத்தாக தமது உயிர்களைக் காவு கொடுத்த அந்தக் காட்சிகளே எமது மனதின் முன் தோன்றும். பலர் எம் கண் முன்னாலும் இன்னும் பலர் எவ்வாறு என்று தெரியாமலும் தமது உயிர்களைக் காவு கொடுத்தனர்.
இக்கொடூரக் காட்சிகளை இதயமுள்ள எவருமே மறக்கமாட்டார்கள். இலங்கையில் இவ்வாறு பல தடவைகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குச் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்கள் என்ற வேறுபாடு காட்டப்படவில்லை. ஆனால், 2009 மே மாதம் வன்னியில் நடந்தது போல் எந்தவொரு காலகட்டத்திலும் நடந்ததில்லை. இங்கு குழந்தைகள், சிறுவர்கள் சிறுமியர்கள், பெண்கள், வயோதிபர்கள், நோயாளிகள், இளைஞர்கள் என எந்தவொரு பாகுபாடுமின்றி ஆயிரக்கணக்கானவர்கள் துடிதுடித்து மாண்டனர்.
எனவே, மே மாதம் என்பது சொல்லொணாத் துன்பங்களை நாம் அனுபவித்த துன்பங்களில் மாதங்களில் மிகவும் துயரம் மிகுந்த மாதமாகும். எம்மவர்கள் மறைந்ததையிட்டு அவர்களின் இறுதிச் சடங்குகளைக்கூட நாம் செய்ய முடியவில்லை. எம்மவர் ஒருவர் இறந்துவிட்டால். வருடா வருடம் திவசம் செய்வோம். இதை அவர்கள் இறந்த திதியில் தான் செய்வோம். ஆனால், ஒருவர் இறந்த திதி தெரியாவிட்டால், நாம் மாயம் என்ற ஒன்றைப் பயன்படுத்தி ஒரே நாளில் செய்வோம்.
அதேபோல், வன்னியில் இறந்த எமது உறவுகளுக்காக ஒருநாள் பிரார்த்திப்போம். இது இலங்கையின் சட்டத்திற்கு முரணானதொன்று இல்லை. நாம் இலங்கையின் சட்டங்களை மதிப்போம். நாம் இலங்கையின் சட்டங்களை மீறாத வகையில் எம்மவர்களை எங்கும் நினைவு கூருவோம்.
வீடுகள், பாடசாலைகள், கோவில்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் அமைதியான முறையில் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். எந்தவொரு கட்டத்திலும் சட்டத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடாது பிரார்த்திப்போம்' என்றுள்ளது.

0 Responses to இறுதி மோதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவோம்; யாழ் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் அறைகூவல்