வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு தற்போது எந்த அவசியமும் இல்லை என்கிற தொனியில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயகக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகிய எதிர்க் கட்சிகள் கருத்து வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமானால் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் முன்மொழிந்திருந்தார். அதனை, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் ஏற்றுக்கொண்டு கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், எதிர்க் கட்சிகளின் கருத்தினை கொழும்பு ஊடகமொன்று கேட்டுள்ளது. அதன் போது, பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக, “சி.வி.விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக நியமிப்பது தொடர்பிலோ அல்லது வேறு ஒருவரை பொது வேட்பாளராக நியமிப்பதா என்பது குறித்து நாம் இதுவரையில் முடிவெடுக்கவில்லை. அதற்கான அவசியம் இப்போதைக்கு இல்லையென்றே நாம் நினைக்கின்றோம். அரசாங்கம் எவ்விதமானதொரு தேர்தலை நடாத்தும் என்பது இன்னமும் முடிவான நிலையில், இவ்வாறான கேள்வி எழுவது பொருத்தமற்றதொன்றாகும். விக்னேஸ்வரன் மட்டுமல்ல யார் வேண்டுமென்றாலும் பொது வேட்பாளராக தெரிவு செய்யப்படலாம். ஆனால் தெரிவு செய்யப்படுபவர் பெரும்பான்மை இன சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். வெறுமனே சிறுபான்மை தமிழ் மக்களின் வாக்குகளை மாத்திரம் வைத்து வெற்றி பெற முடியாது. எனவே காலத்தின் தேவைக்கேற்ப நாம் தீர்மானங்களை எடுப்போம்” என்றுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, “ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை நியமிப்பது தவறில்லை. அவருக்கு அதற்கான உரிமையும் தகுதியும் உள்ளது. ஆயினும், மூவின மக்களின் வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலின் போது அவசியமானது. எனவே தமிழர்களின் முழுமையான வாக்குகள் அவசியம் என்பதைப் போலவே சிங்கள மக்களின் வாக்குகளும் அவசியம். பிரதான எதிர்க்கட்சியாகவோ அல்லது பொது எதிர்க்கட்சியாகவோ இணைந்து தேர்தல் போட்டியிட்டாலும் சிங்கள மக்களின் வாக்குகளை பெறவேண்டியதொரு தேவை உள்ளது. எனவே, அதற்கு ஏற்றாற் போலவே வேட்பாளரையும் நியமிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா, “ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனைய தேர்தல்களைப் போல் அல்ல ஜனாதிபதி தேர்தலென்பது நாட்டின் ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலே இது. இதன்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே பொது வேட்பாளருக்கான தேவை இருக்கும். எனவே, ஏனைய எதிர்க்கட்சிகள் மற்றும் எம்முடன் இணைய விரும்பும் சிறு கட்சிகள் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திய பின்னரே சரியானதும் உறுதியானதுமொரு வேட்பாளரை நியமிக்க முடியும். எனவே இது தொடர்பில் முடிவுகளை எடுக்க காலம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to சி.வி.விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக முன்னிறுத்துவது இப்போதைக்கு அவசியமில்லை: எதிர்க் கட்சிகள்!