Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தன் மீது பல்வேறு நெருக்குதல் காரணமகவே சிபிஐ பொய் வழக்கு போட்டு சாட்சியங்களை சேர்த்துள்ளதாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நேற்று ஆஜரான கனிமொழி, சிபிஐ நீதிபதி அவரிடம் ஏற்கனவே அளித்திருந்த 1,700 கேள்விகளுக்கு எழுத்துபூர்வ பதிலைத் தாக்கல் செய்தார்.

அதன் குறிப்பீட்டில் '2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலைஞர் டிவியின் பங்குதாரராக இருந்த நான், அந்நிறுவனத்தின் தொடக்க காலத்தில், 2007 ஜூன் மாதம் இரு வாரங்கள் மாத்திரமே இயக்குனராக இருந்தேன். அதைத் தவிர அந்நிறுவனத்திற்கும் எனக்கும் எந்தத்தொடரும் கிடையாது. அதன் அன்றாட நடவடிக்கைகளும் கிடையாது. நான் ராஜினாமா செய்துவிட்ட 18 மாதங்கள் கழித்தே சிபிஐ குற்றம் சாட்டியுள்ள கலைஞர் டிவி நிதிப் பரிவர்த்தனை நடந்துள்ளது. இதன் போது நான் எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்துவிடவில்லை.

இருந்தபோதும், என்னை இந்த வழக்கில் சிபிஐ குற்றவாளியாக சேர்த்துள்ளது. இதன் பின்னணியில் வெவ்வேறு நெருக்கடிகள் இருக்கலாம் என சந்தேகிக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஸ்பெக்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு கைமாறாக கலைஞர் டிவிக்கு ரூ 200 கோடியை ஸ்வான் நிறுவனம் கொடுத்தது என்பது சிபிஐ வழக்காகும்.

0 Responses to என் மீது நெருக்குதல் காரணமாக சிபிஐ பொய் வழக்கு போட்டுள்ளது: கனிமொழி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com