Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு வந்துள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தலைவர் ஜோன் வில்லியம் ஆசேயிடம், ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அடுக்கடுக்காக பொய்களை கூறியுள்ளார். 

இன்று அவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றிந்தது.

இதன் போது இந்த வருடம் யாழ்ப்பாணத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரபரீட்சையில் அதிக மாணவர்கள் சித்தி அடைந்தமைக்கு தாமே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வடமாகாணம் இலங்கையில் 22 சதவீத பொருளாதார வளர்ச்சியை காட்டி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், வடக்கிலும் கிழக்கிலும் 50 சதவீதமான மக்கள் போசாக்கு குறைப்பாட்டினாலும், வாழ்வாதாரம் இல்லாத சூழ்நிலைகளாலும் பாதிப்படைவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேநேரம் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த 12 ஆயிரம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் புனர்வாழ்வுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிறுவர் போராளிகள் அனைவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்த காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு வடக்கு கிழக்கில் விசாரணை மேற்கொண்டிருந்த போது, இறுதி யுத்தத்தில் சரணடைந்த பல போராளிகளை காணவில்லை என்று 16 ஆயிரத்துக்கும் அதிகமான முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஐ.நா பாதுகாப்புச் சபையின் தலைவர், மகிந்த சந்திப்பு! அடுக்கடுகாகப் பொய்யுரைத்தார் மகிந்த!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com