Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேர்தல் காலங்களினில் மட்டுமே அரசியல்வாதிகள் எம்மை தேடிவருகின்றனர்.வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் பற்றி பேசும் ஆட்கள் எம்மைப்பற்றி ஏதும் கதைக்கமறுக்கிறார்களென குற்றஞ்சாட்டியுள்ளனர் முள்ளிக்குளம் மக்கள். அவர்களை சந்திக்க சென்ற வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் மற்றும் விவசாய கால்நடைகள் அமைச்சர் ஆகியோரிடமே சீறிப்பாய்ந்துள்ளனர் மக்கள்.

கடந்த 2010ஆம் ஆண்டு முள்ளிக்குளம் கிராமத்துக்கு மீள்குடியேறச்சென்ற மக்கள் கடற்ப்படையினரால் மீள்குடி  ஏற்றப்படாது தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் முள்ளிக்குளம் கிராமத்துக்கு அண்மித்த மலக்காடு என்னும் காட்டுப்பிரதேசத்தில் அம்மக்கள் நான்கு வருடங்களாக தற்;காலிக கொட்டில்களில் வசித்து வருகின்றனர். அங்கு அம்மக்களின் மிக முக்கிய தேவையான தற்காலிக கொட்டில்களை புனரமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. அதில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் அங்கு வசிக்கும் மக்களின் நிலைமை கருதி தற்க்காலிக கொட்டில்களை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளார்.

அத்தோடு அம்மக்களின் விவசாய நிலங்கள் கடற்ப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் அவ்விவசாய நிலங்களை பெற்றுத்தருமாறும், அங்குள்ள குளங்களை புனரமைத்து பயன்பாட்டிற்கு பெற்றுத்தருமாறும், தமது கால்நடைகளை பராமரிக்கக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்  கடற்ப்படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள அக்கிராம மக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் வெறுமனே வலிவடக்கு பற்றி கதைப்பதுடன் நின்றுவிடாது சம்பூர் மற்றும் தமது பிரதேசங்களது விடுதலைக்கும் குரல் கொடுக்க அம்மக்கள் கோரியுள்ளனர்.

0 Responses to வலி.வடக்கு மட்டுமல்ல..ஏனைய ஆக்கிரமிப்பு பற்றியும் பேசுங்கள் முள்ளிக்குளம் மக்கள் கோரிக்கை!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com